×

விழிப்புணர்வு கதைக்கு ஏ சர்ட்டிபிகேட்டா? ஹீரோ வேதனை

எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் அட்டு ஹீரோ ரிஷி ரித்விக், ஆஷா பர்த்தாலோம் நடித்துள்ள படம், மரிஜுவானா. இசை, கார்த்திக் குரு. நாளை ரிலீசாகும் படம் குறித்து ரிஷி ரித்விக் கூறியதாவது: கஞ்சா என்பதன் அறிவியல் பெயர், மரிஜுவானா. கஞ்சா  உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதால் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது கதை.

சில முன்னணி ஹீரோக்கள் கதையை கேட்டுவிட்டு, ஏதேதோ காரணம் சொல்லி மறுத்துவிட்டனர். நான் மட்டும் துணிச்சலுடன் நடித்தேன். காரணம், சமுதாயத்துக்கு அவசியமான கருத்து சொல்லும் படம் என்பதுதான். எனவே, எனக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதிக போதை ஒரு மனிதன் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்று சொல்லும் விழிப்புணர்வு கருத்து கொண்ட இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இது அதிர்ச்சி தந்தது.

Tags : hero ,
× RELATED மாவட்டம் முழுவதும் இணையத்தள...