×

மொட்டை போட்ட பிரபுதேவா

காதல், நடனம், காமெடி கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார் பிரபுதேவா. அவர் இயக்கிய போக்கிரி, தபாங் (இந்தி) படங்கள் ஆக்‌ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அடுத்து நடிக்கும் படம் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில் பஹிரா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

இதன் 70சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் பிரபுதேவா மொட்டை அடித்து சன் கிளாஸ் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். ஆங்கிலத்தில் வெளியான ஜங்கிள் புக் படத்தில் இடம் பெறும் பஹிரா என்ற கதாபாத்திரத்தின் குணாம்சம் கொண்டதுபோன்ற கதாபாத்திரத்தை இப்படத்தில் பிரபுதேவா ஏற்றிருக்கிறாராம். இன்னும் சொல்லப்போனால் சைக்கோ போன்ற கதாபாத்திரம் என்கிறார்கள்.

Tags : Prabhu Deva ,
× RELATED மீண்டும் சல்மான் கானை இயக்கும் பிரபுதேவா