×

சந்தானத்திடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்

சந்தானம் நடித்திருக்கும் படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ். வைபவி, ஷிந்திலியா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஆனந்த் பால்கி இயக்கி உள்ளார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இப்படம் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 14ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த படி ரிலீஸ் ஆகவில்லை. மீண்டும் தள்ளிப்போகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் சரியாக சொல்லுங்கள் என படக் குழுவினரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்துள்ள இயக்குனர்,’பட ரிலீஸ் தேதி பற்றி தவறாக வழிநடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

படம் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்து விட்டதாக எண்ணி சந்தானம் மற்றும் படக்குழுவை புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தோம். வேறு சிலரது தவறை இன்னமும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவை தீர்க்கப்பட்டு விரைவில் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Santhanam ,
× RELATED இயக்குநராகிறார் காவேரி! காவேரியை நினைவிருக்கிறதா?