×

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா... காதலன் பிறந்த நாளில் உருகிய பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர், தற்போது ‛பொம்மை, வான், மாபியா, குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். டிவியில் நடிக்கும் போது சரி, அதற்கு பின்னரும் சரி இவரை சுற்றி காதல் செய்திகள் தீயாய் பறந்தன. சமீபத்தில் கூட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் இதை மறுத்து சூர்யா பதிவிட்டார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர், நீண்ட காலமாகவே தனது கல்லூரி கால நண்பரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அவருடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அந்த நண்பருடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கும் பிரியா, கூடவே நட்பு, காதல் கலந்த ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி காலத்தில் மகிழ்ச்சியான, நம்பிக்கை உள்ள, கவர்ச்சி இல்லாத சுமாரான அழகுடன் இருந்த என்னை, நீ காதலித்த போது எனக்கு ஆச்சர்யாக இல்லை. ஆனால் இப்போதும் அதே அன்புடன் நீ என்னுடன் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

உடைந்து போன ஒன்றை ஒன்று சேர்ப்பது என்பது வேடிக்கையான உற்சாகமான விஷயம் அல்ல. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கிறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என் உலகில் நீதான் என் சூரிய ஒளியாக இருக்கிறாய். பிறந்தநாள் வாழ்த்துகள் மா... இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : baby girl ,birthday ,Priya Bhavani Shankar ,
× RELATED பிரபாஸ் சல்மானுக்கு பிறகே எனக்கு...