×

ரைசா டேட்டிங் செய்ய விரும்பும் ஹீரோ

சமீபகாலமாக சில ஹீரோயின்கள் துணிச்சலாக பேசத் தொடங்கி உள்ளனர். சில மாதங்களுக்கு முன் நடிகை தமன்னாவிடம், ‘நீங்கள் படங்களில் ஹீரோக்களுடன் லிப் டு லிப் காட்சிகளில் நடிப்பதில்லை அப்படி ஒரு காட்சி அமைந்தால் எந்த நடிகருடன் நடிப்பீர்கள் என்றதற்கு தயக்கம் எதுவும் இல்லாமல், ‘இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு லிப் டு லிப் முத்தம் தந்து நடிக்க தயார்’ என்றார். தற்போது நடிகை ரைசா யாருடன் டேட்டிங் செய்ய விருப்பம் என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்த நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார். காதலுக்கு காதல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஹரிஷ் கல்யாணுடன் ப்யார் பிரேமா காதல் படத்தில் ரைசா ஜோடியாக நடித்திருந்தார். அதில் ஏகத்துக்கு லிப் டு லிப் காட்சிகளில் இருவரும் நடித்திருந்தனர்.

இதையடுத்து தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரைசா. ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய விருப்பம் என்று ரைசா கூறியிருப்பதை ரசிகர்கள் பலர் நக்கலடித்திருக்கிறனர். இத நான் எதிர்பார்க்கவே இல்லை என்றும், உங்கள் டிவிட்டர் கணக்கை யாராவது ஹேக் செய்துவிட்டார்களா என்றும், தயவு செய்து அவரை கல்யாணம் செய்துகொள் என்றும் சரமாரி கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : Raisa ,
× RELATED பாய் பிரண்ட் இல்லையே: ரைசா வருத்தம்