தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்

இந்த ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற ஒரே தமிழ் படம் பாரம். இந்த படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின்  கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடுகிறது. இதுகுறித்து இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி கூறியதாவது: கிராமப்புறங்களில் இன்றளவும் தொடர்ந்து வரும் தலைக்கூத்தல் என்ற உறுதியான நம்பிக்கையை பற்றி பேசும் படமாக பாரம் உருவாகியுள்ளது. இதை வெற்றிமாறன் வெளியிடுகிறார்.

தலைக்கூத்தல் என்ற பெயரில், சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களை பற்றி இப்படம் பேசுகிறது. 85 வயதுக்கு   மேற்பட்டவர்களில் பலர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் படப்பிடிப்பு நடந்த கிராமத்தில் இருந்து தேர்வு  செய்யப்பட்டவர்கள். புனே  திரைப்பட கல்லூரியில்  படித்த நான் இப்படத்தின் கதை எழுதி இயக்கி எடிட்டிங்  செய்து, ஆன்ட்ரா சொரூப்  என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளேன்.  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் திரைக்கு  வருகிறது.

Tags : Vijayamaran ,
× RELATED வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல்