×

அருண்விஜய் விஜய் ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா

அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற  வெற்றி படத்தை இயக்கினார் அறிவழகன். அடுத்து இக்கூட்டணி ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படம் மூலம் இணைகிறது. அதிக பொருட்செலவில்  உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடக்க உள்ளது. இதுபற்றி அறிவழகன் கூறும்போது,’குற்றம் 23 படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜயை இயக்குவதில் மகிழ்ச்சி. தமிழில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை.

எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜசேகர் ஒளிப்பதிவு. சாம் சி.எஸ் இசை. சக்தி வெங்கட்ராஜ் அரங்கம் அமைக்கிறார். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு கோடைவிடுமுறையில் திரைக்கு வரவுள்ளது’ என்றார்.

Tags : Regina Kesandra ,Arunvijay Vijay ,
× RELATED புதுமுகங்களை இயக்கும் வசந்தபாலன்