குடிக்கு அடிமையாய் கிடந்தேன்; அஜீத் பட நடிகை ஓபன் டாக்

அஜித்குமார், பிரசாந்த் இணைந்து நடித்த படம்  ‘கல்லூரி வாசல்’.  இதில் கதாநாயகியாக நடிகை பூஜா பட் அறிமுகமானார். மும்பையில் நடந்த விழா ஒன்றில் பேசிய பூஜா பட்,’நான் குடிக்கு அடிமையாகி இருந்தேன்’ என தெரிவித்தார். இதுபற்றி பூஜா பட் கூறியதாவது: ஒரு முறை புத்தாண்டு தினத்தன்று கோவா சென்றேன். அங்கு என்னை சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். நான் தீராத டிப்ரஷினில் (மன அழுத்தம் ) வேதனைப்பட்டேன்.

இதனால் குடிக்கு அடிமையானேன். கோவா கடற்கரையில் அமர்ந்து நிறைய குடித்திருந்தேன் அப்போது எனக்கு தற்கொலை எண்ணமெல்லாம் வந்தது. உடனே  எனது தந்தைக்குபோன் செய்தேன். அவர் ஆறுதல் கூறினார். அவர் நல்ல ஆலோசனை வழங்கினார். அவர் தான் என்னை விபரீத தற்கொலை உணர்விலிருந்து காப்பாற்றினார். மன அழுத்தம் என்பது பணக்காரர்களின் வியாதி என்று சொல்லப்படுகிறது.

அது உண்மையாக இருந்தாலும் அதை போக்கிக்கொள்ள வீட்டில் உள்ளவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் டைனிங் டேபிளில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது மனதில் உள்ளவற்றை குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொண்டால் மன அழுத்தம் ஏற்படாது. ஆனால் அதை எத்தனைபேர் செய்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இவ்வாறு பூஜா பட் கூறினார்.

Tags : Ajith ,Open Dog ,film actress ,
× RELATED அஜீத்துக்கு வில்லனாக பிரசன்னா ஆசை