×

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்

வாழ்க்கையில் சிறிய, சிறிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். பின்னர் பேசிய கமல், சிறிய இலக்குகளை அடுத்தடுத்து வெற்றிகரமாக எட்டினால் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்று தெரிவித்தார்.

திரைத்துறையில் 60 ஆண்டுகள் கடந்திருந்தாலும் ஒவ்வொரு புதிய படமும் எனக்கு பாடமே என்று கமல் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை, நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக அறிவித்தது. இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை, கமல்ஹாசன் பல்லாண்டு காலமாக சினிமா, கலாசாரம் மற்றும் கலை ஆகியவற்றில் பங்களிப்பு செய்துவருவதை பாராட்டி வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளது.

Tags : Kamal Haasan ,
× RELATED கடமையை செய்யாத சமூகம் உரிமையை இழந்துவிடும்: கமல்ஹாசன் பேச்சு