×

அமெரிக்காவில் நயன்தாராவுக்கு விருந்து கொடுத்த அஜீத் பட தயாரிப்பாளர்

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டுக்குள் நிச்சயதார்த்தமாவது செய்துகொள்ளுங்கள் என இருவீட்டு குடும்பத்தாரும் அவர்களி டம் தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால் பிஸியாக வே இருக்கிறார்.

வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தநிலையில் அவருக்கு அஜீத் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் மீண்டும் அஜீத் படத்தை தயாரிக்கிறார். எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை கடந்த மாதம் நடந்தது. படத்துக்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. கடந்த பொங்கல் தினத்தில் அஜீத், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படம் திரைக்கு வந்து வெற்றிபெற்றது. அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தால் பட விற்பனை சூடுபிடிக்கும் என்ற கணக்குபோட்டிருக்கிறார் போனிகபூர்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அமெரிக்கா சென்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவர்களை போனிகபூர் சந்தித்ததுடன் இருவருக்கும் இரவு விருந்து அளித்தார். பின்னர் நயன்தாராவிடம் பேசிய போனிகபூர் வலிைம படத்தில் அஜித் ஜோயாக நடிக்க வேண்டும் என்று கேட்டதாக  தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு நயன்தாரா ஓ.கே சொல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : filmmaker ,Ajit ,Nayanthara ,US ,
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...