×

சினிமாவில் 2 மாநில சிஎம் ஆன நடிகர்

அரசியலில் ஈடுபட்டு திரைப்பட நடிகர்கள் முதல்வர் ஆவது அரிதாக நடக்கிறது. அதேசமயம்  திரைப்படங்களில் எளிதாக அவர்கள் முதலமைச்சர் வேடம்  ஏற்று நடிக்கின்றனர். ஒரே நடிகர் இரண்டு மாநில முதல்வராக நடிப்பதும் ரொம்பவே குறைவு. அந்த வாய்ப்பு நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்திருக்கிறது. மலையாளத்தில் உருவாகும் ஒன் படத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் வேடத்தில் நடிக்கிறார் மம்மூட்டி. இதையடுத்து நேற்று முதல்வர் அலுவலகத்துக்கு சென்று பினராய் விஜயனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தன்னை மம்மூட்டி வந்து சந்தித்ததுபற்றி முதல்வரே தனது வலை தள பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து,’மம்மூட்டி என்னை அலுவலகத்தில் சந்தித்தார். படப்பிடிப்பு ஒன்று குறித்து என்னிடம் அவர் பேசினார்’ என தெரிவித்துள்ளார். இப்படத்தை சந்தோஷ் விஸ்வநாதன் இயக்குகிறார். மம்மூட்டி ஏற்கனவே மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Actor ,state CM ,
× RELATED ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினி அறிவிப்பு