×

மஞ்சுவாரியர் வேடத்தில் ஸ்ரேயா

பூ பார்வதி, நவ்யா நாயர், கீர்த்தி சுரேஷ், ரம்யா நம்பீஸன் என பல ஹீரோயின்கள் மலையாளத்திலிருந்து தமிழில் நடிக்க வந்தபோதும் மஞ்சுவாரியர் மட்டும் கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு அசுரன் படம் மூலம் தமிழில் நடித்தார். இதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். முதல்படமே மஞ்சுவாரியருக்கு வெற்றியாக அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

அசுரன் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில் தனுஷ் ஏற்ற வேடத்தை வெங்கடேஷ் ஏற்க உள்ளார். அதேபோல் மஞ்சுவாரியர் வேடத்தை ஸ்ரேயா ஏற்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஸ்ரேயா தமிழில் நடித்துள்ள நரகாசூரன் படம் முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இதுதவிர தமிழ் மற்றும் இந்தியில் 2 படங்கள் நடிக்கிறார். இந்நிலையில்தான் ஸ்ரேயாவுக்கு அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. மற்ற படங்கள்போல் இல்லாமல் இப்படத்தில் கிளாமருக்கு முக்கியத்துவம் இருக்காது.  கிளாமர் இல்லாத கதாபாத்திரத்ைத ஸ்ரேயா ஏற்கிறாரா, இல்லையா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Tags : Shreya ,Manchuvariyar ,
× RELATED பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில்...