×

கமலின் மகள் இப்போது ரஜினியின் மகளாகிறார்

பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ் கடந்த 2015ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. அதன்பிறகு நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். தங்கை மற்றும் மகள் வேடங்களில் நடித்து வந்த நிவேதா 4 வருடத்தில் குமரியாகிவிட்டார். தெலுங்கு படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பை ரஜினி சமீபத்தில் முடித்தார். இதன் டப்பிங் பணிகள் நடக்கவிருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பை முடித்த கையோடு இமயமலை சென்று 5 நாள் சுற்றுப்பயணத்துக்கு பிறகு சென்னை திரும்பினார்.

தர்பாரில் தான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி நிவேதா தாமஸ் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறும்போது,’இப்போது உலகம் இதையறிந்து கொள்ளட்டும்! இங்கு ஒரேயொரு ஆதித்ய அருணாச்சலம் மட்டும் இருக்க முடியும். அவர் எனது தந்தை’ என குறிப்பிட்டிருக்கிறார். தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பதை வெளிப்படுத்தியுள்ள நிவேதா, ரஜினியின் கதாபாத்திர பெயர் ஆதித்ய அருணாச்சலம் என்பதையும் வெளிப்படுத்தி யிருக்கிறார்.

Tags : Kamal ,Rajini ,
× RELATED ஆஷா சரத் மகள் அறிமுகம்