×

அமேசானில் தீ; சிம்ரன் கவலை

உலகின் மிகப் பெரிய காடாக விளங்குகிறது அமேசான் காடுகள். இந்த காட்டுப் பகுதிக்குள் மட்டும் 9 நாடுகள் அடங்கியிருக்கிறது. பூமித்தாயின் ஆடையாகவும், இயற்கையின் பிறப்பிடமாகவும், விலங்குகளின் வசிப்பிடமாகவும் திகழும் இக் காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுபற்றிய தகவல்கள் எதுவும் பரபரப்பாக வெளியாகவில்லை. நம்மூர் நடிகை சிம்ரன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பெருங்கவலை தெரிவித்திருக்கிறார்.

‘பூமிப்பந்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. அதை உடனே அணைக்க வேண்டும். பூமிப்பந்தை காப்பாற்ற நம்மால் வேறென்ன செய்ய முடியும். உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்ஸிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படு கிறது. ஆனால் அந்த காடு தீப்பற்றி எரிவதுபற்றி எந்த ஊடகமும் வெளிப்படுத்த வில்லை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் விதம் இந்த தகவலை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இது மிக முக்கிய விஷயம் ஆரோக்கியமாகவும், பொறுப்புடனும் வாழ வேண்டியது அவசியம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் சிம்ரன். சிம்ரனைப்போலேவே அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ குறித்து கவலை தெரிவித்திருக்கிறார் 2.0 பட வில்லன் அக்‌ஷய் குமார். ‘அமேசான் காடுகளில் எரியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த வேதனையாகவும் அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.

Tags :
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்