தமிழுக்கு வரும் மலையாள பெண்குட்டி

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரம்யா நம்பீசன், பார்வதி வரிசையில், ‘இது என் காதல் புத்தகம்’ படம் மூலம் அறிமுகமாகிறார் மலையாள பெண்குட்டி அஞ்சிதாஸ்ரீ. சும்மா கும்முனு தளதளக்கும் அஞ்சிதாஸ்ரீயின் விதவிதமான புகைப்படங்களை பட தரப்பு வெளியிட்டுள்ளது. இப்படம்பற்றி இயக்குனர் மது ஜி.கமலம் கூறும்போது,’ தமிழகத்தின் உட்புற கிராமப்பகுதி ஒன்றில் வாழ்பவர்கள் யாரும் கல்வி அறிவு பெறக்கூடாது என்று அடாவடித்தனம் செய்யும் ஊர் தலைவரின் மகளுக்கு கல்வி மீது அதிக ஈடுபாடு ஏற்படுகிறது.

தந்தையின் சிந்தனைக்கு எதிராக செயல்பட தொடங்குகிறார் மகள். அதனால் வரும் பிரச்னைகளை படம் விளக்குகிறது. அஞ்சிதாஸ்ரீ ஹீரோயினாக அறிமுகமாகிறார். ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் தயாரிக்கிறார்கள். அருண் கிருஷ்ணா ஒளிப்பதிவு. ஸ்ரீமாதவ் இசை. வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல் உள்பட 4 பாடல்கள் இடம்பெறுகிறது.’ என்றார்.

Tags :
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி