×

கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை படிக்கவில்லை; ஆனாலும் சூர்யா கருத்தில் உடன்பாடில்லை - சரத்குமார்

நடிகர் சூர்யா நீட் தேர்விற்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் தனது அதிருப்தியை சமீபத்தில் வெளிப்படுத்திருந்தார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் வந்தாலும், பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளார். மேலும் புதிய கல்விக்கொள்கை பற்றிய கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை தான் இன்னும் படிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்