×

அடிச்சுக்குவோம் புடிச்சிக்குவோம்... ஆனாலும் ஒண்ணா சேந்துக்குவோம்

அரசியல்வாதிகள் மாதிரி அடிச்சுக்குவோம், புடிச்சிக்குவோம் ஆனாலும் ஒண்ணா சேந்துக்குவோம் என்பது போல் ஹீரோயின்களுக்கிடைய அடிச்சக்கோ புடிச்சிக்கோ போட்டி நடக்கிறது. கை நிறைய காசு வந்ததும் போட்டியெல்லாம் நட்பாக மாறிவிடுகிறது. காஜல் அகர்வால், தமன்னா, டாப்ஸி மூவருமே சம காலத்து ஹீரோயின்கள். டாப் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற போட்டி மூவருக்குமே உண்டு.

அவர்கள் தங்களது ஆசைப்படி முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட நிலையில் தற்போது நட்பை புதுப்பிக்கத் தொடங்கி உள்ளனர். தேவி முதல் பாகம், 2ம் பாகம் பேய் படத்தில் நடித்த தமன்னா அடுத்து ‘பெட்ரோமாக்ஸ்’ என்ற திகில் படத்தில் நடிக்கிறார். ரோஹின் வெங்கடேசன் இயக்குகிறார். இவர் அதே கண்கள் படத்தை இயக்கியவர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதற்கு எந்த பிரபலத்தை அணுகலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் காஜல் அகர்வால், டாப்ஸியிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தனர். அதற்கு இருவரும் ஒப்புக்கொண்டார். தமன்னா படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகை டாப்ஸி வெளியிட்டார். டைட்டிலுடன் கூடிய மற்றொரு போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார். இதையறிந்து சந்தோஷம் அடைந்த தமன்னா இருவருக்கும் நன்றி  தெரிவித்திருக்கிறார்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்