×

யார் என்று தெரிகிறதா?

படத்தில் உள்ளவரை யார் என்று தெரிகிறதா? அவ்வளவு சீக்கிரத்தில் யூகிக்க முடியாதபடி ஒரு கெட்டப் அணிந்திருக்கிறார் நடிகர் அமிதாப்பச்சன். வயதான பிறகு மூத்த நடிகர்கள் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருப்பதுண்டு. 76 வயதிலும் இளம் நடிகர்களுக்கு கடும் போட்டியாளராக விளங்கி கொண்டிருக்கிறார் அமிதாப்.

‘பா’, ‘102 நாட் அவுட்’ இந்தி படங்களில் மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருந்த அமிதாப் தற்போது, ‘குலாபோ சிடாபோ’ படத்திற்காக நெற்றியில் சுருக்கம் விழுந்து, பெரிய மூக்குடன் தலையில் மப்ளர் சுற்றி இப்படியொரு வயதான தோற்றம் ஏற்றிருக்கிறார். முஸ்லிம் முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஆயுஷ்மான் ஹீரோவாக நடிக்கிறார். சூஜித் சிர்கார் இயக்குகிறார்.

Tags :
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்