ராஜமவுலிக்கு ‘டேக்கா’ கொடுக்கும் ஹீரோயின்

பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு ஒன்றரை வருடத்துக்குமேல் அடுத்த படத்தை தொடங் காமலிருந்தார் இயக்குனர் ராஜமவுலி. பின்னர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடிக்கும் ஆர்ஆர்ஆர் சரித்திர படத்தை இயக்க தயாரானார். இதற்காக பல ஹீரோயின்களை ஆய்வு செய்து இறுதியில் பாலிவுட் நடிகை அலியாபட்டை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். இதற்கிடையில் ராம்சரண், என்டிஆர் நடித்த ஒரு சில காட்சிகளை படமாக்கப்பட்டது.

இந்நிலையில் ராம் சரண் ஜிம்மில் பயிற்சி செய்த போது காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்றார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ராம் சரண் தற்போது பூரணகுணம் அடைந்து படப்பிடிப்புக்கு தயார் ஆனதையடுத்து படப்பிடிப்பை தொடங்க தயாரானார் ராஜமவுலி. கதாநாயகி அலியாபட்டுக்கு தகவல் சொல்லி அவரை படப்பிடிப்பில் பங்கேற்க வர கேட்டபோது அவர் அளித்த பதில் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடல் தொற்று நோய் ஏற்பட்டிருப்பதால் படப்பிடிப்புக்கு செல்லாமல் சில நாட்கள் வீட்டிலிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருப்பதால் தற்போதைக்கு படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று அலியாபட்டிடம் இருந்த பதில் வந்தது. வேறு வழியில்லாமல் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு திட்டமிடலை மீண்டும் மாற்றி அமைக்கும் சூழலுக்கு உள்ளாகியிருக்கிறார் ராஜமவுலி.

× RELATED பால் மாங்காய் நிவேதனம் ஏற்கும் திருப்பாவை நாயகி