சொந்த கதை... மாதுரி தீட்சித் மறுப்பு

பாலிவுட்டின் முன்னாள் கனவுக்கன்னி மாதுரி தீட்சித்தின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சில சம்பவங்களை தொகுத்து சினிமா படமாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இதையறிந்த மாதுரி தீட்சித், தன் வாழ்க்கையை படமாக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஏன் அனுமதி கொடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டபோது, ‘தற்போது என் வாழ்க்கை சம்பவங்களை சினிமா படமாக உருவாக்க வேண்டாம்.

காரணம், இன்னும் என் வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் அனுமதி தர மறுத்துவிட்டேன்’ என்றார். கடந்த 35 வருடங்களாக பாலிவுட் படங்களில் நடித்து வரும் மாதுரி தீட்சித், தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக இன்ஜினியர் என்ற படத்தில் நடித்தார். ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கிய இப்படம், முக்கால்வாசி படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கைவிடப்பட்டது.

× RELATED ஒரே நாளில் நடக்கும் கதை