×

பாரத் படத்துக்காக இறங்கி வரும் சல்மான் கான்

ரம்ஜான் பண்டிகைக்கு சல்மான் கான், கேத்ரினா கைப் நடித்துள்ள பாரத் படம் திரைக்கு வர உள்ளது. வழக்கமாக படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதை சல்மான் விரும்ப மாட்டார். தனக்கு தோதான நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்பது அவரது வழக்கம். அதுவும் படம் வெளியாகும் ஒரு வாரம் முன்புதான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.

ஆனால் இப்போது படம் வெளியாவதற்கு 2 வாரம் முன்பே நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். தன்னுடன் பட ஹீரோயினும் தனது மாஜி காதலியுமான கேத்ரினா கைபையும் உடன் அழைத்து வருகிறார். சல்மானின் இந்த மாற்றத்துக்கு காரணம், அவரது கடைசி படங்களான டியூப்லைட், ரேஸ் 3 ஆகியவை படுதோல்வி அடைந்ததுதான்.

தொடர் ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்து வந்த சல்மான் கானுக்கு அந்த படங்களால் வினியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு தரும் அளவுக்கு சூழல் சென்றது. இதனால் இந்த முறை பாரத் படத்துக்கு முடிந்தவரை சிறப்பான புரமோஷன் கொடுத்து, பாக்ஸ் ஆபீசில் மெகா ஓபனிங்கை கொடுக்க வேண்டும் என சல்மான் திட்டமிட்டுள்ளார். இதற்காகவே அதிகமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.

Tags : Salman Khan ,Bharat ,
× RELATED சூரத் ஆற்றில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் சிக்கின..!!