×

பள்ளத்துக்குள் வீடு கட்டி படப்பிடிப்பு....

பள்ளத்துக்குள் வீடு கட்டி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். இதுபற்றி அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார்.
‘சில வருடங்களுக்கு முன் சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது எனக்கு தெரிந்தவரின் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அந்த உண்மை சம்பவத்தையே, ‘ஹவுஸ் ஓனர்’ பெயரில் படமாக்குகிறேன். இதற்காக ஈசிஆர் பகுதி பண்ணை நிலம் ஒன்றில் ஆழமாக பள்ளம் தோண்டி நிஜ வீடு கட்டப்பட்டது.

ஆழத்தில் வீடு கட்டியதற்கு காரணம் எந்நேரமும் வீட்டுக்குள் வெள்ள நீர் தேங்கி நிற்க வேண்டும் என்பதால்தான். தரைமட்டத்தில் கட்டினால் தண்ணீரை தேக்கி வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாதல்லவா? ஷூட்டிங்கில் ஒருநாளைக்கு 11 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நீர் முழுவதும் சுத்திகரித்து அப்பகுதியில் உள்ள கிணற்றிலேயே விடப்பட்டது. இதில் ஆடுகளம் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, பசங்க கிஷோர், லவ்லின் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை. ராமகிருஷ்ணன் தயாரிப்பு. ஆடுகளம் கிஷோர் தங்குவதற்கு கூட ஓட்டல் அறை கேட்காமல் பட அலுவலகத்திலேயே தங்கி நடித்தார். அவ்வளவு எளிமை. அவருக்கு சம்பளமும் குறைவாகத்தான் கொடுத்தோம்’ என்றார்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்