×

ஹீரோவாக ஜெயித்த பிறகு தான் திருமணம்: எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மான்ஸ்டர் படம் சமீபத்தில் வெளியானது. இதில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது: மான்ஸ்டர் என் கேரியரில் முக்கியமான படம். நான் நடித்த படத்திற்கு மக்கள் குடும்பமாக வருவதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இப்படியான ஒரு படத்தை நான் கொடுக்காமல் விட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது. இனி மான்ஸ்டர் போன்று நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.

ஒரு நடிகனாக ஜெயிக்க எனக்கு 25 வருடங்கள் ஆகியிருக்கிறது. அடுத்து ஹீரோவாக ஜெயிக்க வெண்டும். நான் நடித்து முடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை, இரவா காலம் படங்கள் வெளிவர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் ஹீரோவாக ஜெயித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன்.

Tags : SJ Surya ,
× RELATED பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா