×

எலிதான் வில்லனா? அமிதாப் ஆச்சரியம்

ஒரு நாள் கூத்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் நாளை வெளியாகிறது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது: மனிதனையே அழிக்கக்கூடிய வலிமை ஒரு எலிக்கு இருக்கிறது. இந்தியாவில் அதற்கு தனி கோயில் இருக்கிறது. நிஜமான எலியுடன் நான் நடித்த காட்சிகள் 25 நாட்கள் படமானது. படப்பிடிப்பில் அதற்கு பயிற்சி அளிக்க 3 பேர் வருவார்கள். அதனுடன் ஒரு பாடல் காட்சியும் இருக்கிறது. அந்த பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடினேன்.

சில காட்சிகளில் எலிக்கு தகுந்த மாதிரி முகபாவனை வரவில்லை என்று, மீண்டும் நடித்தது மாறுபட்ட அனுபவமாக இருந்தது. கதைப்படி என் காதலுக்கு எலிதான் வில்லன். மும்பையில் உயர்ந்த மனிதன் படத்தில் அமிதாப் பச்சனுடன் நான் இணைந்து நடித்தபோது, படப்பிடிப்பில் எலி செய்த சில சாகசங்களைப் பற்றி சொன்னேன். அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டார்.

Tags : Ellen William ,
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்