டுவிட்டர் பக்கத்திலிருந்து விலகிய ஐஸ்வர்யாராய்

இணைய தளத்தில் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் யாருக்கு அதிக ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதில் நடிகர், நடிகைகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காக கவர்ச்சி படங்கள், டாப்லெஸ், நிர்வாண படங்கள் வெளியிடுவது, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து சொல்வது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதை நீண்ட நாட்களாக தவிர்த்து வருகிறார்.

இதுபற்றி ஐஸ்வர்யாராய் கூறியதாவது: நீண்ட நாட்களாகவே நான் இணைய தள பக்கத்தில் பதிவு செய்வதை தவிர்த்து வருகிறேன். நிகழ்வுகளை அதில் பதிவு செய்யும்போது அதன் மீதே பலரும் கவனம் செலுத்துகின்றனர். நிஜ அனுபவத்தை கவனிப்பதில்லை.

நிஜ வாழ்க்கையோடு இணைந்திருக்க வேண்டும் என்ற தேவையில் நான் இருக்கிறேன். மேலும் இணைய தள பதிவு என்பது வர்த்தக ரீதியிலாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் எண்ணிக்கை முக்கியமாக இருக்கிறது. அதன் மூலம் தங்களது பாப்புலாரிட்டியை காட்டிக்கொள்ள முயல்கின்றனர். பிறகு எப்படி அதிலிருந்து தனித்துவம் தெரியும்?. இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.

× RELATED ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?