ஒரே படத்தில் 9 கதாநாயகிகள்

ஒரே படத்தில் 2 ஹீரோக்கள் அல்லது 2 ஹீரோயின்கள் நடித்தாலே பல்வேறு கிசுகிசுக்கள் உருவாகின்றன. மேலும் பிரபல ஹீரோக்கள், ஹீரோயின்கள் டபுள் ஹீரோ, ஹீரோயின் கதைகளில் நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர். தற்போது ஒரே படத்தில் 9 ஹீரோயின்கள் இணைந்து நடிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் இணைத்திருப்பது மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் படம்தான். இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

மறைந்த என்.டி.ராமராவ் படங்களில் நடித்தபோது அவருடன் பல்வேறு நடிகைகள் ஜோடியாக நடித்தனர். அந்த காட்சிகள் இப்படத்துக்காக மீண்டும் படமாக்கப்படுகிறது. இதையடுத்து அந்தந்த நடிகைகள் வேடத்தில் நடிப்பதற்காக பிரபலமான 9 ஹீரோயின்கள் ஒப்பந்தம் ஆகி உள்ளனர். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் ஆக வித்யாபாலன் நடிக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாவித்ரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி வேடத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்ரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ணகுமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர். மேலும் சந்திரபாபுநாயுடு கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார்.அவரது மனைவியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். ஒரே படத்தில் 9 ஹீரோயின்கள் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

× RELATED விஜய் நடிக்கும் தளபதி 63 படத்திற்கு...