விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க கோபிசந்த் விருப்பம்

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம், தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. தில் ராஜு இதை தயாரிக்கிறார். தெலுங்கிலும் திரிஷாவே நடிப்பார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க அல்லு அர்ஜுன், ராணா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. இந்நிலையில் இதில் நடிக்க கோபிசந்த் விருப்பம் தெரிவித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்ந்து கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களிலேயே நடித்து வரும் கோபிசந்த், தனது இமேஜை மாற்றி 96 பட ரீமேக்கில் நடிக்க விரும்புகிறாராம். ஆனால் படக்குழு ஹீரோவை இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழில் இயக்கிய பிரேம்குமார் தெலுங்கிலும் இந்த படத்தை இயக்க உள்ளார்.

× RELATED விஜய் சேதுபதி கதையில் புதுமுகங்கள்