×

தயாரிப்பாளர் மரணம்

சென்னை: தயாரிப்பாளர் வி.நடராஜன் மாரடைப்பால் காலமானார். மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’, ஆர்.சி.சக்தி இயக்கிய ‘சிறை’, பிரபு நடித்த ‘கலியுகம்’, ‘உத்தம புருஷன்’, ‘தர்மசீலன்’, ‘ராஜா கைய வெச்சா’, சத்யராஜ் நடித்த ‘பங்காளி’, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சின்னக் கவுண்டர்’, பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், பிரபு நடித்த ‘பசும்பொன்’, எடிட்டர் பி.லெனின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ‘நதியைத் தேடி வந்த கடல்’ ஆகிய படங்களை தயாரித்தவர், ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன் (70). கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, நேற்றிரவு 1 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி ஜோதி, மகன்கள் செந்தில், விக்கி ஆகியோர் இருக்கின்றனர். நேற்று மாலை மயிலாப்பூர் சுடுகாட்டில் நடராஜனின் இறுதிச்சடங்கு நடந்தது.

Tags : Chennai ,V. Natarajan ,Rajinikanth ,Mahendran ,R. C. Shakti ,Prabhu ,Purushan ,Sathyaraj ,R. V. Vijayakanth ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்