×

புயல் மழையால் வெறிச்சோடிய தியேட்டர்கள்

சென்னை: தமிழகத்தில் பெஞ்சல் புயலால் உருவான மழை கடந்த சில நாட்களாகவே நீடித்து வருகிறது. நேற்று அந்தப் புயல் கரையைக் கடக்க இருந்ததால், தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் சில மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இருந்தாலும் தியேட்டர்களில் முன்பதிவு என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவ்வப்போது மழை வரலாம் என்ற வானிலை முன்னறிவிப்பும் இருப்பதால் தியேட்டர்களுக்குச் செல்வதை மக்கள் தவிர்த்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் ஆர்ஜே பாலாஜி நடித்த ‘சொர்க்கவாசல்’ உள்ளிட்ட ஆறு படங்கள் வெளியானது. ‘சொர்க்கவாசல்’ படத்தில் மட்டும்தான் ரசிகர்களுக்கு அறிமுகமான ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். மற்ற படங்களில் நடித்துள்ள நாயகர்கள் அவ்வளவு பிரபலமானவர்கள் இல்லை. ‘சொர்க்கவாசல்’ படமும் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் அப்படத்தையும் குடும்பத்துடன் சென்று பார்க்க வாய்ப்பில்லை. இப்படியான காரணங்களால் இந்த வாரம் வெளியான படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Cyclone Benjal ,Tamil Nadu ,
× RELATED மழையால் நீர்நிலைகள் நிரம்பியது நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்