×

ஸ்ருதிஹாசன் கோபம்

சென்னை: கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் சலார் 2, சென்னை ஸ்டோரி படங்களில் நடிக்கிறார். சமீபத்தில், காதலரை பிரேக்கப் செய்து தனியாக வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் உரையாடுவார். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் கிசுகிசுக்களுக்கு பதில் கொடுத்துள்ளார். முக அழகிற்காக சர்ஜரி செய்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, ‘ஆமாம் நான் செய்திருக்கிறேன்.

எல்லோரும் அதை செய்கிறார்கள், ஆண்களும் செய்கிறார்கள். நீங்கள் அதை கவனிக்கவில்லை என்றால் காந்தக்கண்ணாடி போட்டுப்பாருங்கள். இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் என் உடலுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை விரும்பி செய்கிறேன். நான் அதை விளம்பரப்படுத்தவில்லை. இது ஃபேஸ் சர்ஜரி இல்லை, அது பிசினஸ் கிடையாது’ என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் மும்பையில் பல கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை கட்டி வருகிறீர்களாமே என்ற கேள்விக்கு, ‘மும்பையில் ஒரு பங்களாவோட மதிப்பு எவ்வளவுன்னு உங்களுக்கு தெரியுமா?’ என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார்.

Tags : Shruti Haasan ,Chennai ,Kamal Haasan ,
× RELATED கல்யாணம் என்றாலே எனக்கு பயம்: சொல்கிறார் ஸ்ருதி ஹாசன்