×

மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி

சென்னை: நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்தி வரும் மாதவன், தற்போது ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘யாரடி நீ மோகினி’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ள மித்ரன் ஆர்.ஜவஹர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஃபேண்டசி டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஏ மீடியா கார்ப்பரேஷன் சார்பில் சர்மிளா, ரேகா விக்கி, மனோஜ் முல்கி இணைந்து தயாரித்துள்ளனர்.

முக்கிய காட்சிகள் ஸ்காட்லாந்தில் ஃபோர்த் பிரிட்ஜ், எடின்பர்க், டீன் வில்லேஜ், விக்டோரியா ஸ்ட்ரீட் ஆகிய உலகப் புகழ்பெற்ற ‘ஹாரி பாட்டர்’ படங்கள் படமாக்கப்பட்டிருந்த லொகேஷன்களில் படமாக்கப்பட்டன. மாதவன், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சாய் தன்ஷிகா, ஜெகன், நிரூப் என்.கே., உபாசனா ஆர்.சி, மேத்யூ வர்கீஸ், உதய் மகேஷ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ரவி பிரகாஷ் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, எம்.தியாகராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.

Tags : Madhavan ,Chennai ,Mitran R. ,Jawahar ,
× RELATED டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை