பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் ரதசப்தமியை முன்னிட்டு சுவாமி வீதி உலா

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் ரத சப்தமியை முன்னிட்டு சுவாமி வீதி உலா நேற்று நடந்தது. பள்ளிகொண்டாவில் உள்ள உத்திர ரங்கநாதர் கோயிலில் நேற்று ரதசப்தமியை முன்னிட்டு காலை சூரிய பிரபை வாகனத்தில், பின்னர் அன்ன வாகனத்திலும், மதியம் அனுமந்த வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சென்று உற்சவ சுவாமி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

பின்னர் சன்னதி தெரு, கோட்டை தெரு, மாட வீதிகள், குடியாத்தம் ரோடு, மண்டப தெரு, ஆகிய முக்கிய வீதிகளில் வழியாக உற்சவ சுவாமி பெருமாள் வீதி உலா சென்றார். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வடிவேல்துரை, மணியம் அரி, எழுத்தர் பாபு மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.

× RELATED திருப்பதி கோயிலில் தை மாத...