×

வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா

மும்பை: சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தி பேமிலி மேன் வெப் தொடரில் நடித்தார்.இந்த வெப் தொடர் சர்ச்சையில் சிக்கினாலும் பாலிவுட்டில் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், சமந்தா கமிட்டாகியுள்ள புதிய வெப் தொடர் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தி பேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே தான் இந்த வெப் தொடரை தயாரிக்கிறார்கள். இதில் சமந்தா பாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருக்கும் ஆதித்யா ராய் கபூருடன் இணைந்து நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதல் முறையாகும். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை வாமிகா கப்பியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Vamika ,Mumbai ,India ,Bollywood ,Bollywood.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலுங்கு படவுலகிலும் பாலியல் தொல்லை...