- கடந்த உலகப் போர்
- சென்னை
- ஹிப்ஹாப் தமிழா ஆதி
- ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட்
- லண்டன்
- தமிழா
- ஆதி
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ஹிப்ஹாப் தமிழா எண்டர் டெயின்மெண்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி தயாரித்து எழுதி இயக்கி இசை அமைத்து நடித்துள்ள படம், ‘கடைசி உலகப் போர்’. போரின் கொடுமைகளைப் பற்றி பேசும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ், லண்டனில் நடந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரியில் வெளியானது. ஓவோ அரினா வெம்ப்லியில் தமிழ்ப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாவது இதுவே முதல்முறை. ‘மீசைய முறுக்கு’, ‘சிவகுமாரின் சபதம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு அவர் இயக்கும் 3வது படம் இது.
முக்கியமான வேடங்களில் நாசர், நட்டி, அனகா, அழகம்பெருமாள், ஹரீஷ் உத்தமன், முனீஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா ஷரா, குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் நடித்துள்ளனர். அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி, விக்னேஷ் ஸ்ரீகாந்த், பாட்டிசெவன், சிவவாக்கியார் பாடல்கள் எழுதியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
The post ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப் போர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.