சென்னை: கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை, சமீபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 15ம் தேதி முதல் சென்னையில் துவங்கி நடக்க உள்ளது.
மிக பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ். சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன். கலை இயக்குனர் – ராஜீவன் நம்பியார். படத்தொகுப்பு – வேலு குட்டி. தயாரிப்பு நிர்வாகம் – ஏபி. பால் பாண்டி. இணை தயாரிப்பு – ஏ. வெங்கடேஷ். தயாரிப்பு – எஸ். லக்ஷ்மன் குமார்.
The post ஜூலை 15 முதல் சர்தார் 2 படப்பிடிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.