×

பீனிக்ஸ்: வீழான் நவம்பர் 14ல் ரிலீஸ்

சென்னை: விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களில் அவரது மகன் சூர்யா நடித்திருந்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை 2’ படத்தில் நடித்து வரும் அவர், ‘பீனிக்ஸ்: வீழான்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார்.

ஆக்‌ஷனுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதே தேதியில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள ‘கங்குவா’ என்ற படமும் திரைக்கு வருகிறது. ஒரேநாளில் சூர்யா என்ற பெயர் கொண்ட 2 ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

The post பீனிக்ஸ்: வீழான் நவம்பர் 14ல் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Suriya ,Vijay Sethupathi ,Vetrimaran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இயக்குனர் ஆனார் சூர்யா மகள்