×

இஸ்ரேல் தாக்குதலுக்கு திரிஷா, சமந்தா உள்பட திரையுலகம் கண்டனம்

 

புதுடெல்லி: சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில் பாலஸ்தீனம் ரஃபாவில் அப்பாவி பொதுமக்கள் தங்கி இருந்த முகாம் பலத்த சேதம் அடைந்து குழந்தைகள் உள்பட 45 பேர் பலியாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ‘All Eyes On RAFAH’ என பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக நடிகைகள் திரிஷா, சமந்தா, ஹன்சிகா ஆகியோர் தங்களது சமூக வலைதளத்தில் ‘All Eyes On RAFAH’ என பதிவு செய்து, இஸ்ரேலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.

மேலும் துல்கர் சல்மான், ரகுல் பிரீத் சிங், இயக்குனர் அட்லி ஆகியோரும் இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை கண்டித்துள்ளனர். பல பாலிவுட் திரையுலக பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர். சோனம் கபூர், வருண் தவான், மலைக்கா அரோரா, எமி ஜாக்சன், திரிப்தி டிம்ரி, நோரா உட்பட பல பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கண்டனம் தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர்.

The post இஸ்ரேல் தாக்குதலுக்கு திரிஷா, சமந்தா உள்பட திரையுலகம் கண்டனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Trisha ,Samantha ,Israel ,New Delhi ,Rafah, Palestine ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெளிநாட்டு பயணத்தில் இருந்து...