×

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் ராயன் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘திருச்சிற்றம்பலம்’. இதை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கினார். இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள புதிய படத்துக்கு ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 50வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், கடந்த 9ம் தேதி மாலை சன் பிக்சர்ஸின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.

‘அடங்காத அசுரனோட ஆட்டம் ஆரம்பம்’ என்ற பர்ஸ்ட் சிங்கிள், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் எழுதிய இப்பாடலுக்கு பிரபுதேவா நடனக்காட்சி அமைத்திருக்கிறார். பர்ஸ்ட் சிங்கிளை தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் பகிர்ந்து வைரலாக்கினர். இப்படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே எடிட்டிங் செய்ய, பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். ஜாக்சன் அரங்குகள் அமைத்துள்ளார். வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்ததாக தனது எக்ஸ் தளத்தில் தனுஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் சிங்கிள் நேற்று சன் பிக்சர்ஸின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி சம்பந்தப்பட்ட ‘வாட்டர் பாக்கெட்’ பாடலான இதை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் ரசிகர்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இப்படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 2017ல் தனுஷ் இயக்கத்தில் திரைக்கு வந்த படம், ‘ப.பாண்டி’. இதில் தனுஷ், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, மடோனா செபாஸ்டியன் நடித்தனர். தற்போது உருவாகியுள்ள ‘ராயன்’ படம், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 2வது படமாகும்.

The post சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் ராயன் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sun Pictures ,CHENNAI ,Mitran R. Jawahar ,Sun TV Network ,President ,Kalanithi Maran ,Kollywood Images ,
× RELATED சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக...