×

நீட் தேர்வை மையப்படுத்தி உருவான அஞ்சாமை

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ‘அஞ்சாமை’. சுப்புராமன் இயக்கியுள்ளார்.

இவர், இயக்குனர்கள் மோகன் ராஜா, என்.லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிரித்திக் மோகன் நடித்துள்ளனர். திருச்சித்ரம் நிறுவனம் சார்பில் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

 

The post நீட் தேர்வை மையப்படுத்தி உருவான அஞ்சாமை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anjam ,CHENNAI ,Tamil Nadu ,Union government ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமிழக...