×

மண்ணாங்கட்டியை முடித்தார் நயன்தாரா

சென்னை: ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘அன்னபூரணி’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’. ‘ப்ளாக் ஷீப்’ யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். சான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜி மதன் படத்தொகுப்பு செய்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

The post மண்ணாங்கட்டியை முடித்தார் நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Mannangkatti ,Chennai ,Dude Vicky ,YouTube ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’- சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா