×

காளி வெங்கட்டின் விவசாயிகளுக்கான பாடல்

சென்னை: குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடத்தில் நடித்து வரும் காளி வெங்கட், தற்போது விவசாயிகளுக்கான பாடல் காட்சியில் நடித்துள்ளார். அனுராதா ராஜ்குமாரின் மதராசி விஷன் புரொடக்‌ஷன் விவசாயம் சார்ந்த பாடல் காட்சியை தயாரித்துள்ளது. ‘களவாணி 2’ படத்தின் இசை அமைப்பாளர் மணி அமுதவன் எழுதியுள்ள ‘எங்க எங்க போகும் இந்த பாதை’ என்ற பாடலை, வசந்தராஜ் சிங்கராஜ் இசையில் பம்பா பாக்யா பாடியுள்ளார்.

அசோக் மித்ரன் இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘விவசாயிகளை உற்சாகப் படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல், கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் படமாக்கப்பட்டது. வெவ்வேறு துறையில் இருக்கும் எல்லா இளைஞர் களையும் விவசாயம் செய்வதற்கான பணிகளுக்கு அழைத்து வர முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், என்னால் இயன்றளவுக்கு முயற்சி செய்து இருக்கிறேன்’ என்றார்.

The post காளி வெங்கட்டின் விவசாயிகளுக்கான பாடல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kali Venkat ,CHENNAI ,Anuradha Rajkumar ,Madrasi Vision Production ,Mani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...