×

விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்

சென்னை: விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘குரங்கு பொம்மை’. நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கினார். இதையடுத்து அவர் எழுதி இயக்கியுள்ள படம், ‘மகாராஜா’. இது விஜய் சேதுபதி நடித்துள்ள 50வது படம். அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்த காட்சிகள் இடம்பெறுவதால், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ள இதில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி, முனீஷ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் நடித்துள்ளனர். ‘காந்தாரா’, ‘சலார்’ அஜனீஷ் லோக்நாத் இசை அமைத் துள்ளார். வரும் மே மாதம் 16ம் தேதி ‘மகாராஜா’ படம் திரைக்கு வருகிறது. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார்.

The post விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mamata Mohan Das ,Vijay Sethupathi ,Chennai ,Vidharth ,Bharathiraja ,Delna Davies ,Nithilan Swaminathan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...