×

ஆங்கிலத்தில் உருவாகும் தி டார்க் ஹெவன்

சென்னை: நகுல் ஹீரோவாக நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் டைட்டில் லுக்கை சசிகுமார், பரத், சிபிராஜ் வெளியிட்டனர். பாலாஜி இயக்க, டீம் பி புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. ‘D 3’ பி.கே.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, ‘உடன்பால்’ சக்தி பாலாஜி இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் படம் உருவாகிறது. ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மர்மக்கொலை நடக்கிறது. அதன் தொடர்ச்சியை யாருமே யோசிக்கவில்லை. அதுபற்றி பேசும்போது, மற்றவர்கள் அதை ஒரு கதை போல் நினைத்து கடந்து சென்றுவிடுகின்றனர். அப்போது ஒரு கொலை நடக்கும்போது வரும் இளம்பாரி என்ற இன்ஸ்பெக்டர், அதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து மர்மங்களை கண்டுபிடிக்கிறார். புலனாய்வு அதிகாரி வேடத்தில் நகுல் நடிக்கிறார். மற்றும் ரேணு சவுந்தர், சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயாள் ஆகியோருடன் இலங்கை நடிகர் ஒருவர் நடிக்கிறார்.

The post ஆங்கிலத்தில் உருவாகும் தி டார்க் ஹெவன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Sasikumar ,Bharat ,Sibraj ,Nakul ,Balaji ,Team ,Production ,B. K. Manikandan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...