×

ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்: ஹாலிவுட்டுக்கு போனது திரிஷ்யம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: ‘திரிஷ்யம்’ மற்றும் ‘திரிஷ்யம் 2’ படங்கள் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் க்ரைமில் சிக்கிய தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே திரிஷ்யம் படத்தின் கதை.

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்திய படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இரண்டாம் பாகமும் வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘திரிஷ்யம்’ மற்றும் ‘திரிஷ்யம் 2’ படங்கள் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 2013ல் திரிஷ்யம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளது. இதனால் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற உள்ளது.

The post ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்: ஹாலிவுட்டுக்கு போனது திரிஷ்யம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Trishyam ,Hollywood ,Los Angeles ,Jeethu Joseph ,Mohanlal ,Meena ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்