×

14 வயது சோனா கேரக்டரில் ஜனனி

சென்னை: அஜித் குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் அறிமுகமான சோனா ஹைடன், கடந்த 20 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் கவர்ச்சி மற்றும் வில்லி, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை மையப்படுத்தி கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடித்துள்ள வெப்தொடர், ‘ஸ்மோக்’. இதை அவரது யுனிக் புரொடக்‌ஷனுடன் இணைந்து ஷார்ட்பிளிக்ஸ் தயாரித்துள்ளது. சோனா ஹைடனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் விதமாக, வெவ்வேறு வயதுகளில் 3 வெவ்வேறு நடிகைகள் நடிக்கின்றனர். ‘இளமை பூக்கும் 14 வயதில் அழகான வாழ்க்கையை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். ஆனால், அந்தக் கரம் என்னைப் பிடித்து தள்ளிவிட்டது. நான் பேச யாருமே கிடைக்கவில்லை. ஏதோ உயிர் வாழ்கிறேன்’ என்ற வாசகங்களுடன், சோனா ஹைடனின் 14 வயது தோற்றத்தை பர்ஸ்ட் லுக்கும், மோஷன் போஸ்டரும் வெளிப்படுத்தி இருக்கின்றன. ‘மத்தகம்’ வெப்சீரிஸில் கவுதம் வாசுதேவ் மேனன் மகளாக நடித்த ஜனனி விஜயகுமார், சோனா ஹைடனின் 14 வயது கேரக்டரில் நடித்துள்ளார். ஆல்வின் புருனோ இசை அமைக்க, வெங்கி தர்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

The post 14 வயது சோனா கேரக்டரில் ஜனனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Janani ,Sona ,Chennai ,Sona Hayden ,Ajith Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாட் ஸ்பாட் 2வது பாகம் உருவாகும்: இயக்குனர் தகவல்