×

ஹீரோ ஆனார்கள் கோபி, சுதாகர்

சென்னை: டு கிரியேட்டிவ் லேப்ஸ் தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் ஸ்கேலர் நிறுவனம் இணைந்து வழங்கியுள்ள வெப்சீரிஸ் கோடியில் இருவர். பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குனர் ஷாகித் ஆனந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 25ம் தேதி இந்த சீரிஸின் முதல் எபிசோட் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியானது.

தமிழக யூடியூப் காமெடி வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி, சுதாகர், முதல் முறையாக முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர். கிராமத்தில் வாழும் இரு இளைஞர்கள் கிராம வாழ்வின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க பெங்களூர் பயணித்து அங்கு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க முனைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தான் இந்த சீரிஸின் கதை.

இந்த சீரிஸில் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக் ஆர்வி, நித்யஸ்ரீ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பெங்களூருவில் பல ஜோர்ட் இந்தியன் வீடியோக்களை இயக்கிய ஷாகித் ஆனந்த் இந்த சீரிஸினை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இந்த சீரீஸ் டைட்டில் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

The post ஹீரோ ஆனார்கள் கோபி, சுதாகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gopi ,Sudhakar ,CHENNAI ,Two Creative Labs ,Parithapangal Productions ,Scalar ,Shahid Anand ,Paritabangal Gopi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 2014ல் மோடி கொடுத்த கேரண்டி என்னாச்சு: சொன்னாரே..! செஞ்சாரா..? முத்தரசன் கேள்வி