×

பிரபல நடிகர் லைசென்ஸ் முடக்கம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுராஜ் வெஞ்ஞாரமூடு. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி ஏராளமான படங்களில் நாயகனாகவும் நடித்து இருக்கிறார். கடந்த வருடம் ஜூலை 29ம் தேதி இரவு கொச்சி தம்மனம் பகுதி அருகே தனது காரை ஓட்டிச் சென்றார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரத் (31) என்பவரின் பைக் மீது அவரது கார் மோதியது.

இதில் அந்த வாலிபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கொச்சி பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் அதற்கு நடிகர் சுராஜ் வெஞ்ஞாரமூடு விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து அவரது லைசென்சை முடக்க வாகன போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

The post பிரபல நடிகர் லைசென்ஸ் முடக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thiruvananthapuram ,Suraj Vennyaramoodu ,Kochi Tammanam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 வாலிபர்கள் படுகாயம்