×

₹3 கோடி தங்க கேக்கை வெட்டிய ஊர்வசி ரவுடெலா: சமூக வலைத் தளத்தில் கடும் விமர்சனம்

மும்பை: ₹3 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா. இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுடெலா, தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான ஆல்பம் பாடல்களிலும் தோன்றியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊர்வசி ரவுடெலா தனது 30வது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில் அவர் பிரபல பாடகர் ஹனி சிங்குடன் தங்க முலாம் பூசப்பட்ட கேக் ஒன்றை வெட்டியது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. இந்த கேக்கை பாடகர் ஹனி சிங் ஊர்வசிக்கு பரிசளித்துள்ளார்.

24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த கேக்கின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ஹனி சிங்குடன் ஊர்வசி ரவுடெலா இணைந்து வெளியிட்ட ‘லவ் டோஸ்’ ஆல்பம் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது ‘செகண்ட் டோஸ்’ என்ற தலைப்பில் மற்றொரு ஆல்பத்தை இருவரும் உருவாக்கி வருகின்றனர். அந்த பாடலின் படப்பிடிப்பு தளத்தில்தான் ஊர்வசி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஒரு நடிகையின் பிறந்த நாளுக்கு இத்தனை ஆடம்பரம் தேவையா என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

The post ₹3 கோடி தங்க கேக்கை வெட்டிய ஊர்வசி ரவுடெலா: சமூக வலைத் தளத்தில் கடும் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Urvashi Rautela ,Mumbai ,Bollywood ,Saravanan.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த...