×

சுஜீத் இயக்கத்தில் நானி

ஐதராபாத்: டி.வி.வி எண்டர் டெயின்மெண்ட் தயாரிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பன்மொழி படத்தில் நானி நடிக்கிறார். அவரது பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ள பட நிறுவனம், அடுத்து நானி நடிக்கவுள்ள 32வது படத்தை தயாரிப்பதாக அறிவித்து உள்ளது. டி.வி.வி.தனய்யா, கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்தை சுஜீத் இயக்குகிறார்.

தற்போது பவன் கல்யாணை ‘ஓஜி’ என்ற படத்தில் இயக்கி வரும் சுஜீத், ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படப்பிடிப்பு முடிந்தவுடன் நானி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து நானி கூறுகையில், ‘இது முழுமையான சுஜீத் படம். பவருக்குப் பிறகு இந்த லவ்வரிடம் வருவார்’ என்றார். ஆக்‌ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு வன்முறையாளன் அஹிம்சையாளனாக மாறினால், அவனது உலகம் தலைகீழாக மாறும் என்பதே இப்படத்தின் மையக்கரு.

The post சுஜீத் இயக்கத்தில் நானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nani ,Sujeeth ,HYDERABAD ,TV Entertainment ,TVV ,Thanaiah ,Kalyan Dasari… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்