×

மயானத்தில் வெளியான அஞ்சலி பட டீசர்

ஐதராபாத்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து வருபவர், அஞ்சலி. கடந்த 2014ல் அவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ஹாரர் படம், ‘கீதாஞ்சலி’. இதன் 2வது பாகம் ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. சீனிவாஸ் ரெட்டி, சத்யா, பிரம்மாஜி, ராகுல் மாதவ், ரவிசங்கர், ஆலி நடித்துள்ளனர்.

இதை கோனா பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் கோனா வெங்கட் தயாரித்துள்ளார். சிவா துர்லபதி எழுதி இயக்கியுள்ள இப்பட டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத் பேகம்பேட் மயானத்தில் நடந்தது. டீசர் வெளியீட்டு விழா மயானத்தில் நடந்தது இதுவே முதல்முறை. திகில் படம் என்பதால் இவ்வாறு செய்ததாக படக்குழு தெரிவித்தது.

The post மயானத்தில் வெளியான அஞ்சலி பட டீசர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,Anjali ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஞ்சலியின் 50வது படம்